நலம் நலம் தானே நீயிருந்தால்

சென்ற வாரம் வாழ்க்கை துணைக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.

மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.

‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’

எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது வா.து. வுக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. வா.து. விடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன்.

‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’

அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்!

மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.

‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’

மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’

‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார்.

‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.

மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.

ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் வா.து. வை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.

வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.

‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.

நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.

வாழ்க்கை துணையும் கூடவே சிரித்தார்

வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?

நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!

 

நலம் நலம் தானே நீயிருந்தால்” இல் 30 கருத்துகள் உள்ளன

 1. // ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ //

  //வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?

  நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!//

  நல்ல நகைச்சுவையான பகிர்வு.
  பாராட்டுக்கள். 😉

  அன்புடன்
  VGK

  [Blogspot இல் மட்டும் எழுதுங்கோ ப்ளீஸ்..]

  1. வாருங்கள் வைகோ ஸார்!
   தாய் வீட்டை விட்டு வர முடியவில்லை!
   இதையே அங்கும் போடுகிறேன்.போட்டு விட்டு உங்களுக்கு லிங்க் அனுப்ப நினைத்தேன். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்.
   சிரமத்திற்கு மன்னிக்கவும்!

   வருகைக்கு நன்றி ஸார்!

 2. வணக்கம்
  ரஞ்ஜனியம்மா

  (நலம் நலம் தானே நீயிருந்தால்) என்ற ஆக்கம் மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
  உண்மையில் அம்மா நீங்கள் சொன்னது போல மனிதன் மனிதனாகவாழும் வரை சிரித்து வாழவேண்டும் அதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அமையும்
  அருமையான படைப்பு நன்றியம்மா,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 3. அனுபவ நகைச்சுவை அருமையாயிருக்கு. சட்’டென்று கோபம் வரும் ஆசாமியானால் சாமி ஆடிவிடும். இணைந்த நகைச்சுவை வா.து அல்லவா? எல்லோரும் ரஸிக்க , எல்லாரும் மகிழ இரண்டாம் எண்ணத்தில் இதுவும் என்று
  மனதோடு மகிழ்திருப்பார்!!!!!!!!!!!!!!!!!!!!!1

 4. அம்மா நகைசுவையே வாழ்கையில் பல நோயிகளுக்கு மருந்து!!

  ஆனால் எள்ளுக்கும் நகைசுவை எளிதி வருவதில்லை!! அது உங்களிடம் இயல்பாக உள்ளது சந்தோஷமாக உள்ளது!!

  பிறரை சிரிக்கவைப்பது கடினமானது!!! அது உங்களுக்கு மிக எளிது!!! தொடரட்டும் உங்கள் மருந்தில்லா மருத்துவ சேவை!!

 5. படித்தென் ரசித்தென் ஆனால் உங்கள் வாழ்க்கைதுனையின் உடல் நிலையில் என்ன பிரச்னை என்று டாக்டர் கண்டுபிடித்தாக தெரியவில்லை ஆனால் உங்களின் நகைச்சுவை அபாரம் தொடரட்டும் நலம் நலம் காண ஆவல்

 6. ரஞ்ஜனி,

  இந்தப் பதிவை,நகைச்சுவையாகக் கூறுவதற்கு உங்களால்தான் முடியும்! கடைசிப் பகுதி,அதிலும் அந்தக் கடைசி வரி இனிமை. காதுகளைச் சுத்தம் செய்வதோடு இந்தப் பிரச்சினை தீரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

 7. ரொம்பவும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் மஹா!
  நகைச்சுவை மட்டுமே கவலைகளை மறக்கச் செய்கிறது, இல்லையா?
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 8. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் கூட இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடலாம், வா.து-க்கு ஒன்று என்றால் ரொம்பச் சிரமம்! உடல் நலமானது குறித்து மகிழ்ச்சி ரஞ்சனி மேடம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s