கம்பளின்னு ஒண்ணு இருக்கா?

ஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பும் போதும்  உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.

நிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.

சென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது? யாரைப் பார்ப்பது? யாரை விடுவது?

‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு…! படைத்தவனுக்கே வெளிச்சம்!

சென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி! போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்!

எங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே!’ என்று.

இத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி! IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்!

சென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை – காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.

நேற்று ஷதாப்தியில் ஐஸ்க்ரீம் என்ற பெயரில் சாப்பிட்ட  ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச்’ என்றது.  மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக ஊஹும் குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த பதின் வயது சிறுவன் போல இரண்டு மூன்று குரலில்     பேசினேன்.

அவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.

‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு  நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.

‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும்’ சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.

‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே! என்ன ஊர் இது? கொஞ்சம் வெய்யிலில் நிற்கலாமா?’

மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு…!’

பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்!

 

கம்பளின்னு ஒண்ணு இருக்கா?” இல் 33 கருத்துகள் உள்ளன

 1. ரஞ்சனி அவர்களுக்கு,
  நான் 4,5,நாட்களாக பார்த்துக் கொண்டிருந்தேன் உங்களுடைய பதிவுக்காக.இப்பொழுது காரணம் தெரிந்தது.இப்பொழுது பூரண குணமடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  பதிவு நல்ல நகைச்சுவையுடன் அமைந்திருந்தது.

  ராஜி.

  1. ஆஹா! ரசிகை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்!
   இன்னும் மூக்கை உறிஞ்சிக் கொண்டே தான் இருக்கிறேன்.
   ரசித்து படித்து கருத்தை சொல்லியதற்கு நன்றி ராஜி!

 2. அச்சச்சோ…. ஊர் விட்டு ஊர் வந்து, தண்ணீர் மாற்றிக் குடித்தாலே இப்படித்தான். சீக்கிரம் குணமடைய எனது பிரார்த்தனைகள்.

  உடல் நலம் குன்றினாலும், அந்த அவஸ்தையை நகைச்சுவையாக சொன்னது நன்று…

  அடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

  1. எந்த அவஸ்தையானாலும் சிரித்து சிரித்தே போக்கிக் கொண்டு விடுகிறேன், வெங்கட்!
   அதுவும் 15 நாட்களாக கணணி சரியில்லை, ஊருக்குப் போய்விட்டு வந்த அசதி… அவஸ்தை மேல் அவஸ்தை!
   நன்றி உங்கள் பிரார்த்தனைகளுக்கு!

 3. ரஞ்சனி சென்னை என்றாலெ எனக்கு எப்பவுமெ அலர்ஜி தான்
  உங்களின் பயணம் படித்து மிரண்டு விட்டென் நலம் பெற வேண்டுகிறேன் சளி பிடித்தால் சனி பிடித்த்மாதிரி விரைவில் போகாது பார்த்துக்கொள்ளூங்கள்

  1. மருந்து சாப்பிட்டால் ஒரே வாரத்தில் போய்விடும், இல்லாவிட்டால் ஏழு நாட்கள்…..! என்று சொல்லுவார்கள்.
   அலோபதி மருந்துகள் உடனடி நிவாரணம் கொடுத்தாலும், பின் விளைவுகள் தாங்க முடியவில்லை.

   இன்னும் ஒரு 15 நாட்களில் மறுபடி சென்னை!

   வேண்டுதலுக்கு நன்றி விஜி!

 4. வணக்கம்
  ரஞ்ஜனியம்மா
  நல்ல பதிவு உங்களின் மனப் போராட்டத்துக்கு மத்தியில் உங்களின் மனதை பக்குவப்படுத்தி எழுதிய படைப்பு அருமை அருமை தொடருங்கள் பயணத்தை
  அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

 5. “பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு”____எனக்கென்னமோ இதுதான் சாக்குண்ணுட்டு,நீங்கதான் அவரை பழிக்குப்பழி வாங்கறீங்கலோண்ணு தோணுது.பதிவுக்காக தெரிவுசெய்த படம் சூப்பர்.விரைவில் பழையபடியே வலம்வர வாழ்த்துக்கள்.

  உங்களை மாதிரியேதான் நானும் ஒரு காலத்தில்(10 வருடங்களுக்குமுன்) எல்லா சனிஞாயிறுகளிலும் ஊர் பயணம்தான். சகோதர,சகோதரிகள் அதிகம். இங்கு வந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.

  1. எப்படியோ பதிவுக்கு ஒரு விஷயம் கிடைத்தது என்று எழுதிவிட்டேன்!
   இவரது, என்னுடைய உடன்பிறப்புகள் எல்லோரும் சென்னையில். இதோ திரும்ப மூட்டை கட்டியாயிற்று. கிளம்ப வேண்டியதுதான்!
   சுவாரஸ்யமான கருத்துரைக்கு நன்றி
   !

 6. ஓ! உடம்பு சரியில்லைங்களா?
  கவனமாகப் பாருங்கள்.
  பதிவு நன்றாக இருந்தது.
  உங்கள் பதிவு வாசிக்கச் சிரமமாக இருந்தது.
  சிவப்பு நிறப் பின்னணியில் புகைநிற எழுத்து தெளிவின்றி இருந்தது.
  மேலே உயர்த்தி நீல பின்னணியில் வைத்து வாசித்தேன்.
  வயது போகப் போக கொஞ்சம் சிரமம் தான்.
  வேதா. இலங்காதிலகம்.

  1. வாருங்கள் வேதா!
   வெள்ளை நிறப் பின்னணி தானே இருக்கிறது. எனக்கும் உங்களைப் போலத்தான். ஆழ்ந்த பின்னணி இருந்தால் படிக்க முடியாது. அதனால் எப்போதுமோ வெள்ளைப் பின்னணியைத் தான் தேர்ந்தெடுப்பேன்…

   எதோ தவறு நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

  1. நிஜமாவே சனிதான் இந்த சளி. எங்க ஊரில் இப்போ குளிர் வேறு. ஏங்க போனாலும் யாரப் பார்த்தாலும் அக்சூ…! தான்.
   இன்னமும் வெந்நீர் தான் குடித்து வருகிறேன்.
   நன்றி மகி!

 7. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், இல்லையா மஹா!
  நீங்க தான் எனக்கு பீஸ் கொடுக்க வேண்டும் நோயைப் போக்கியதற்கு!
  நன்றி மஹா!

 8. நானும் உங்களைப் போன்றே நிறைய அவஸ்தைபட்டிருக்கின்றேன். திருப்பூருக்கும் பெங்களூருக்கும் சென்று வருவதால் .அதை ரசித்து ? சொன்னது நன்றாகவே இருந்தது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s