வருத்தமே வாழ்க்கையா?

feeling sad

 

இன்னிக்கு வருத்தப் பட விஷயமே இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? வருத்தம் வடிவேலுவின் அக்கா? தங்கை? அண்ணா? தம்பி? அப்போ இந்த செய்தி உங்களுக்கு வருத்தத்தை- இல்லையில்லை- சந்தோஷத்தைத் தரும்.

வருத்தப்படுபவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடந்தது. நாம் எல்லோருமே நம் வாழ்வில் நடந்த 6 விஷயங்களை பற்றி-இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம் என்கிறது இந்த ஆய்வு. 6 வித்தியாசங்கள் போல 6 வருத்தங்கள்!

இதில் முதல் இடம் பெறும் வருத்தம்: நாம் ஆசைபடும் அளவிற்கு பயணம் செய்ய இயலவில்லை என்பதுதான்.

இந்த ஆய்வில் பங்கு கொண்ட எல்லோருமே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வேறு விதமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

வேறு வேலை, வேறு துணைவர் இப்படி.

ஐந்தில் ஒரு பெண் தான் தப்பான ஒரு துணைவருடன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாகவும் ஆண்களில் வெறும் 10% பேர் மட்டுமே இப்படி நினைப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் சுமார் 2000 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 25% பேர் நம் வாழ்வில் வருத்தம் என்பது இல்லாமல் இருக்க முடியாது, வருத்தமும் சேர்ந்ததே வாழ்க்கை என்றும் கருத்து தெரிவித்தனர்.

அதனால் தான் ஒரு நாளைக்கு 19 நிமிடங்களும் ஒரு வாரத்திற்கு 2 மணி நேரங்களும் ‘இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்யாமல் போனோமே’ என்றும் நாம் வருத்தப் பட்டு மாய்கிறோம் என்றும் இந்த ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது.

ஏன் நீங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியவில்லை? காரணங்கள் என்ன என்று கேட்டபோது கிடைத்த பதில்கள்:

மூன்றில் ஒரு பங்கு பேர்கள் தங்களிடம் போதுமான பணம் இல்லாததால், தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழமுடியாமல் போயிற்று என்றனர். 25% பேர்கள் தங்கள் விருப்பத்திற்குரியவரின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ் முடிய வில்லை என்றனர்.

ஆனால் 32% தங்களுடைய பலவீனமான மனமும் – வலிமையான செயல்பாட்டுத் திறன் இன்மையுமே  – வேறு ஒரு நல்ல வாழ்க்கையை – அதாவது தங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் என்று ஒப்புக் கொண்டனர்.

நமது கனவு வாழ்க்கையை வாழ முடியாமல் தடை செய்யப் பல விதக் காரணங்கள் இருப்பதாக நம்மில் பலரும் நினப்பதே இந்த வருத்தங்களுக்குக் காரணம் என்று இந்த ஆய்வின் டாக்டர் கெயில் ப்ரூவர் கூறுகிறார். இந்த மன நிலையில் ஆசைப் பட்டாலும் அதை நிறைவேற்றக் கூடிய மன உறுதி இல்லாமல் போகிறது என்கிறார் இவர்.

நமது 10 உச்சகட்ட வருத்தங்கள்:

  1. போதுமான அளவு பிரயாணம் செய்ய முடியாமை
  2. நண்பர்களுடன் தொடர்பு விட்டுப் போவது
  3. போதுமான உடற்பயிற்சி செய்யாமை
  4. அதிகப் பணம் சேர்த்து வைக்க முடியாமை
  5. புகை பிடிப்பது
  6. பள்ளிப் பருவத்தில் சோம்பித் திரிந்தது
  7. வேலை தேர்வு
  8. சரியான துணை அமையாமை
  9. ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம்
  10. நமது தாத்தா, பாட்டிகளின் வாழ்க்கை பற்றி அவர்கள் இருக்கும்போது கேட்டு அறியாமை.

என்ன தோழர்களே உங்கள் வருத்தங்களையும் பட்டியலிடுங்களேன்!

http://tk.makkalsanthai.com/2012/12/blog-post_8027.html

Advertisements

12 thoughts on “வருத்தமே வாழ்க்கையா?

  1. வணக்கம்
    அம்மா

    நீங்கள் எழுதிய ஆக்கத்தின் தலைப்பு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் பயனுள்ள தலைப்பு அருமையான படைப்பு வாழ்த்துக்கள் அம்மா
    (வருத்தமும் சேர்ந்ததே வாழ்க்கை) என்று என்னுடைய கருத்தாக உள்ளது,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. வாழ்க்கையே வருத்தமாக அமையாதிருந்தால் வாழ்க்கை வாழ்வதற்கே!!!!!!!!!!!குட்டி,குட்டியெல்லாம் பரவாயில்லை.
    எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை காலம் கற்றுக் கொடுத்து விடும். ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.. இது தப்பாகவும் தோன்றலாம். அநுபவங்களைப் பொருத்து தீர்மானங்கள் அமையும். எப்படி என் கருத்து?

  3. காலத்தை விட சிறந்த ஆசிரியர் யார்? வாழ்க்கையை ஆராயாமல் வாழ்வதுதான் சிறந்தது. உங்கள் கருத்தை மறுக்க முடியுமா?

    ஆனாலும் சில வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன இல்லையா?
    இந்தியாவை விட்டு வெளியே போனதில்லை என்பது என் முதல் வருத்தம். இந்த ஆய்வின் முதல் வருத்தமும் பிரயாணம் நிறைய செய்ய முடியவில்லை என்பதுதான்!

  4. அப்பப்பா எத்தனை கவலை மனிதனாகப் பிறந்தவனுக்கு.
    எனக்கும் நிறைய பயணம் செய்ய முடியவில்லை என்று மன வருத்தம் தான்.
    காரணம் ஓய்வு இல்லை பயணிக்க.
    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருத்தம் தான் நல்ல அலசல்
    நன்றி.
    வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    1. அடடா! இவ்வளவு பயணம் செய்தும் இன்னும் பயணம் செய்ய முடிய வில்லையே என்ற வருத்தமா?
      நான் இன்னும் இந்தியாவை விட்டு வெளியே போனதே இல்லை, வேதா!

      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  5. உங்கள் பதிவுகளை ரெகுலராகப் படிக்கவேண்டும் என நினைக்கிறேன், ஆனால் இந்த wordpress- கொஞ்சம் பிடிபடமாட்டேனென்கிறது. ஒரு ப்ளாகில் க்ளிக் செய்தால் அடுத்த ப்ளாகுக்கு வந்துவிடுகிறேன்! 🙂 எது புதுப்பதிவு, ஆர்க்கைவ் எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது. சீக்கிரம் எப்படியாவது அதற்கொரு தீர்வு கண்டுபிடித்து ரெகுலராக வரமுயற்சிக்கிறேன்.

    வருத்தம் பற்றிய ஆராய்ச்சி நல்லா இருக்குங்க!

  6. வாருங்கள் மகி!
    நிறையப் உங்களைப்போலவே சொல்லுகிறார்கள் என்றுதான் ப்ளாக்ஸ்பாட்டிலும் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.
    இங்கே இருப்பதையே அங்கேயும் போடுகிறேன்.
    wordpress-இல் ஒரு ஐடி பண்ணிவிடுங்கள்.

    பாராட்டுக்கு நன்றிங்க!

  7. ரஞ்ஜனி,

    கட்டுரை அருமையா இருக்கு.வருத்தம்னா என்னன்னே தெரியாம இருந்த என்னை இப்படி வருத்தப்பட வச்சிட்டீங்களே!!இப்போது எதைப் பார்த்தாலும்& செய்தாலும் வருத்தமாக இருக்கிறது..

    மனதைப் பொருத்த‌துதான் வருத்தத்தின் அளவும் என்பது என் எண்ணம். வருத்தப்படுவதே பெரிய வருத்தம் என நாங்கள் மறந்திருக்கும்போது, அதைப் பட்டியலிட்டு,ஆராய்ச்சி செய்து,அதைப்பார்த்து வேறு வருத்தமடையனுமா!

    சமீபமாக எனக்கும் ஒரு வருத்தமிருந்தது.இது எனக்கு மட்டும்தான் என ஏகத்துக்கும் மன உலைச்சல்.மகிக்கும் உண்டு என்பதில் என் பாதி வருத்தம் காணாமல் போய்விட்டது.ஹாஹாஹா!

  8. என்னுடைய நிறைய வருத்தங்கள் பட்டியலில் உள்ளன. பட்டியலில் இல்லாத என்னுடைய ஒரு வருத்தம், மாதம் குறைந்தது ஆறு பதிவுகள் எழுத விரும்பி சிலசமயம் ஒன்றோடு நின்று போவது. அடுத்த ஆண்டு எல்லா வருத்தங்களையும் போக்கி இன்னும் வாழ்க்கையை கொண்டாட வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s