குழந்தைகளுக்கு ஒரு கிடைத்தற்கரிய பரிசு!

கருவிலிருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஒரு இணைப்பை கொடுப்பது தொப்புள் கொடி(UmbilicalCard). இதைத் தான் தொப்புள்கொடி உறவு என்கிறோம்.

தாயின் கருவில் குழந்தை வளரும் காலங்களில் குழந்தையை போஷித்துப் பாதுகாப்பது இந்த தொப்புள் கொடி. குழந்தை பிறந்தவுடன் தாயிடமிருந்து குழந்தையை பிரிக்க இதனை வெட்டி விடுகிறார்கள்.

சமீபகாலம் வரை இந்த தொப்புள் கொடியின் பயன்பாடு அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் அண்மைகால ஆய்வுகள் மூலம் இதன் எண்ணிலடங்கா பயன்கள் வெளிவந்துள்ளது.

சுமார் 75 நோய்களிலிருந்து குழந்தையை இந்த தொப்புள் கொடி காக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.

தங்கள் குழந்தைக்கு தங்களைவிட நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப் படுவார்கள். படிப்பைக் கொடுக்கலாம்; பணத்தை சேர்த்து வைக்கலாம்; பட்டம், பதவி எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் ஆரோக்கியம்?

இதுவரை நம்மால் நம் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு, நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மருந்துகள் இவற்றைத் தான் கொடுக்க முடிந்தது, இல்லையா? அவர்களுக்கு நோய் நொடியற்ற எதிர்காலத்தை  நம்மால் அமைத்துக் கொடுக்க முடியுமானால் எத்தனை நன்றாக இருக்கும்?

குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும்  சேமித்து வைப்பதன் மூலம் இதை செய்யலாம். இவற்றை சேமிப்பது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன் இவை என்ன என்று பார்க்கலாம்.

தொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருப்பது. கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று நாம் தூர எறியும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். இவற்றிலிருந்து கிடைக்கும்  ஸ்டெம் செல் எனப்படும் உயிரணுக்கள் பலவிதமான தீவிர நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் உடையவை.

ஸ்டெம் செல்கள் என்பவை நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். பலவிதமான திசுக்களாக உருவாகக் கூடிய தன்மை கொண்டவை இவை.  நமது உடம்பில் நோய் காரணமாக நாம் இழக்கும் செல்களை மறுபடி எண்ணிலடங்கா எண்ணிக்கையில் உருவாக்குகின்றன இந்த ஸ்டெம் செல்கள்.

இந்த தொப்புள் கொடி இரத்தத்தையும், திசுக்களையும் பாதுகாப்பதன் மூலம்  இரத்தப் புற்று நோய், தலசீமியா என்ற ஹீமோகுளோபின் குறைபாடு, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப் படுத்தலாம்.

Umbilical Cord Stem Cell Banking என்ற ஒரு  அமைப்பின் மூலம் இந்த தொப்புள் கொடி இரத்தமும், கொடியின் திசுக்களும் பாதுகாக்கப்படும்.

குழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன்பாகவே இதனை திட்டமிட வேண்டும். பிரசவத்தின் போது குழந்தையின் கொடி இரத்தம் குழந்தை பிறந்த 10 நிமிடத்திற்குள் சேகரிக்கப் படுகிறது. இது முடிந்தவுடன் தொப்புள் கொடியிலிருந்து 25 செ.மீ. அளவிற்கு கத்தரிக்கப்பட்டு ஸ்டெம் செல்களை பிரித்தெடுப்பதற்காக பத்திரப் படுத்தப்படுகிறது.

பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கடுங்குளிர் முறையில் பாதுகாக்கப் படும். தேவைப் படும்போது இவற்றை நோய் தடுக்கப் பயன்படுத்தலாம்.

இப்படி செய்வதால் குழந்தைக்கு எந்த வித தொந்திரவும் ஏற்படாது.

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் குழந்தைக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்கும் பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதைவிட சிறந்த பரிசு உண்டா?

சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கிடைத்த ஒரு புக்லெட் –டிலிருந்து தெரிந்த கொண்ட தகவல்கள் இவை. உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பாத கமலங்கள் காணீரே!

குழந்தைகளுக்கு ஒரு கிடைத்தற்கரிய பரிசு!” இல் 7 கருத்துகள் உள்ளன

  1. மிகவும் பயனுள்ள பதிவு. இதைப்பற்றி இப்போது பல இடங்களில் பேசிக்கொள்கிறார்கள். முழு விபரங்கள் தெளிவாகக் கிடைத்தால், எல்லோருக்குமே இது
    விஷயத்தில் ஓர் விழிப்புணர்வு ஏற்படும்.

  2. நானும்கூட சில வருடங்களுக்கு முன் இதைப்பற்றிக் கேள்விபட்டிருக்கிறேன். சேமித்து வைக்கும் மருத்துவமனைகள் வந்தால் நல்லது.மருத்துவப்பயனுள்ள கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

  3. இதற்கு செலவு எவ்வளவு ஆகும் என்று தெரியவில்லை. எந்த ஒரு வளர்ச்சியும் அடித்தட்டு மக்களைப் போய் சேர வேண்டும் இல்லையா? இந்த முறையும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை வற்றாமல் இருக்க வேண்டும் என்பதே என் கவலை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா!

  4. இனி பிரக்கப்போகும் குழந்தைகளுக்குத்தான் இம்முறை பயன்படுமாதலால் பயனறிந்து, முறை தெறிந்து கொண்டு
    விழிப்புணர்ச்சியோடு யிருக்க கவர்மென்ட் தான் வழிமுறைகளை வழிகாட்டி நடத்த வேண்டும். தனி மனித முயற்சி என்றால் பணமுள்ளவர்களே பயனடைய முடியும்.
    இல்லையா? இதுநாள் வரை ஸரியாக புரிந்து கொள்ள முடியாத

    விஷயம், புரிந்தாற்போல எனக்குத் தோன்றுகிறது. நல்ல விஷயம். இன்னும் இதைப்பற்றி தெறிந்தவற்றையும் எழுது.
    ப்ரயோசனமாக இருக்கும்.

  5. நாம் பாதுகாக்க முடியாது சமீரா. அதற்கென்று இருக்கும் (இரத்த வங்கி போல) வங்கிகளில் பாதுகாக்க முடியும்.
    மருத்துவத் துறையில் இது ஒரு மகத்தான வளர்ச்சி என்கிறார்கள்.
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி