நாளைப் பாடு……!

I forget things!

இன்னும் நான்கு நாட்களில் என் முதல் வலைபதிவு குழந்தைக்கு ஒரு வருடம் நிரம்புகிறது.

நாளைக்கு இருப்போமா என்பதே சந்தேகம்….இன்னும் நாலு நாள் கழித்து நடக்கப் போவதை பற்றி பேசுகிறாயே என்கிறீர்களா?

அடுத்த வருடம் இந்த நாளில் போன வருடம் இப்படியெல்லாம் பயந்து கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விடுவோம், சரி தானே?

நம் நினைவாற்றல் மீது நம் எல்லோருக்குமே இந்த நம்பிக்கை உண்டு. எத்தனைகெத்தனை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அத்தனைகத்தனை வேகமாக மறந்து விடுவோம்!

இந்த ஞாபக மறதி பற்றி ஒருவர் எழுதி இருந்தார்.

ஒரு நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தாராம். கணவன், மனைவி இருவருமே சற்று வயதானவர்கள். பேசிக்  கொண்டு இருக்கும்போது கணவர் சொன்னாராம்: “நேற்று ஜயநகரில் புதிதாக திறந்திருக்கும் ஒரு  உணவகத்திற்குப் போனோம். சாப்பாடு நன்றாக இருந்தது. நீயும் மனைவி குழந்தைகளுடன் போய்விட்டு வா..”

“அப்படியா? உணவகத்தின் பெயர் என்ன?”

சில நிமிடங்கள் யோசித்த கணவர், “ம் ம் …. ஒரு பூ இருக்குமே….சிவப்பு நிறத்தில்….அடுக்கடுக்காக…..முள் கூட இருக்கும்…அதன் பெயர் என்ன…?”

“ரோஜா…”

“கரெக்ட்! பெயரை நினைவூட்டியதற்கு நன்றி!…” என்றவர் உள்ளே திரும்பி “ரோஜா…! நேற்று ஒரு புதிய உணவகம் போனோமே, அதன் பெயர் என்ன..?” என்றாராம்!

இன்னொரு கணவர் தன் மனைவியை எப்போதுமே “டார்லிங், டார்லிங்” என்றே கூப்பிட்டுக்கொண்டு இருந்தாராம். நண்பர் மிகவும் வியப்படைந்து “திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை டார்லிங் டார்லிங் என்று கூப்பிடுகிறீர்களே! உங்களுக்கு மனைவியின் பெயரில் அன்பு குறையவே இல்லை என்று தெரிகிறது”.

கணவர் சொன்னாராம்: “வெளியில் சொல்லாதே! அவள் பெயரை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன…..”

உளவியல் நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா? எல்லாவற்றையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் மூளையை கட்டாயப் படுத்தக் கூடாதாம்.

பலமுறை ஒரு கட்டிடத்தைத் தாண்டி சென்றிருப்போம். அதன் பெயர் தெரிந்திருக்காது. பார்த்திருப்போம்; ஆனால் மனதில் பதிந்திருக்காது. இந்த வகை மறதியினால் தவறு இல்லை. மறந்துவிட்டதை சமாளிக்க வேண்டும் இரண்டாவது கணவரைப் போலே!

உங்கள் அலுவலகத்தில் தீயணைக்கும் கருவி எங்குள்ளது என்று நினைவு இல்லையா? பரவாயில்லை. ஆனால் ஆபத்துக் காலத்தில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்.

சரி தோழமைகளே! உலகத்தின் கடைசி நாளில் ஒரு பதிவு எழுத நினைத்து, எழுதியும் விட்டேன் வெற்றிகரமாக!

படித்துவிட்டு மறந்தும் போகலாம். மறந்து போகாமல் கருத்துரை போட்டால் மகிழ்வேன்….நாளை இருந்தால்……!

 

freshly-pressed-rectangle

 

இதையும் படிக்கலாமே! :முப்பதும் தப்பாமே….!

நாளைப் பாடு……!” இல் 24 கருத்துகள் உள்ளன

 1. ’நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ அல்லவோ!
  அதனாலேயே இரண்டு கணவர்களும் தங்கள் மனைவியின் பெயர்களை மறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  >>>>>

 2. நாளை என்பது நாளை [21.12.2012] மட்டுமல்ல, எப்போதுமே நிச்சயம் இல்லாதது. உலகம் அழியவே அழியாது தான். ஆனால் நாம் அடுத்த நொடிப்பொழிதில் உயிருடன் இருப்போம் என்பதற்கு எந்த ஒரு கியாரண்டியும் கிடையாது. அதனால் நீங்கள் உடனே பார்த்து மகிழட்டும் என இன்றே இப்போதே கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

  >>>>>>

 3. //உலகத்தின் கடைசி நாளில் ஒரு பதிவு எழுத நினைத்து, எழுதியும் விட்டேன் வெற்றிகரமாக!//

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
  ஆனால் இன்று உலகத்தின் கடைசி நாள் அல்ல.

  இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று சொல்லி நாளை முதல் ஆரம்பித்து, அடிக்கடி பதிவுகள் இட்டு அசத்தத்தான் போகிறீர்கள்.

  அட்வான்ஸ் வாழ்த்துகள் மேடம்.

  மெயில் தகவலுக்கும் நன்றிகள்.

  அன்புடன் VGK

 4. ஆஹா நாளை பற்றிய பதிவுக்கு இன்றே நானும் கருத்து எழுதி விட்டேன்! 🙂

  பகிர்ந்த இரண்டு கணவன் – மனைவி நகைச்சுவையும் சிறப்பு! 🙂

 5. ஹலோஓஓ!யாராவது இருக்கீங்களா?நான் பயமில்லாம தூங்க போலாம்தானே!
  நானெல்லாம் பயப்பட மாட்டேனாக்கும்.Dec 21 க்குப் பிறகுதான் பதிவு போடுவதாக உத்தேசம்.

  இரண்டு ஜோக்குகளுமே நல்லாருக்கு.நன்றி.

  1. வாருங்கள் அனு! நீங்கள் கொஞ்ச நாட்கள் முன்னாடியே எழுதிவிட்டீர்கள் என்ன நடக்குமென்று!

   நான் சொன்னதுபோலத்தானே நடந்தது?

   நன்றி அனு!

 6. பரவாயில்லை. ஆயுக்ஷோமம் பண்ணு.கட்டிப்பருபபும் காப்பரிசியும் அனுப்பரேன். குழந்தைக்கு வேண்டியதைச் செய்..
  இங்கிருந்தே பல்லாண்டு சொல்லி வாழ்த்துகிறேன்.
  ரஞ்ஜனியின் வலைப் பதிவுகள் என்றும்,வாழ்க வாழ்கவே.

 7. முன்னும் பின்னும்
  இருக்கும் உலகம்
  வந்துபோகிறவன்
  வருத்தப்பட ஒன்றுமில்லை
  – விக்ரமாதித்யன் நம்பி.
  இந்தக் கவிதைதான் ஞாபகம் வருகிறது. உலகம் அழியாது.
  புத்தாண்டு வாழ்த்துகள்.

 8. ரஞ்சனி,

  நல்ல வேளை ‘Dooms Day’ அன்று எதுவும் நடக்கவில்லை.
  நேற்று போல் இன்றும் உள்ளது நாளையும் இருக்கும்..
  ஞாபக மறதியைப் பற்றிய பதிவு நல்ல நகைச்சுவையுடன் இருந்தது.இது போல் நிறைய கணவர்கள் நிஜத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
  உங்களது வலைப்பதிவின் முதல் பிறந்த நாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.அது மேன் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

 9. வாருங்கள் ராஜி!
  என் கணவரே இந்த ரகம் தான்! அவர் என்னைக் கூப்பிட ‘ஏய்…!’ என்று ஆரம்பிக்கும்போதே நான் ‘ரஞ்சனி, ரஞ்சனி’ என்று நினைவு படுத்தி விடுவேன்!

  வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜி!

 10. வணக்கம்
  அம்மா

  என் நெஞ்சை அள்ளிச் சென்றது கதை நல்ல அருமையான கதை அதில் பிடித்த வரி
  டார்லிங் டார்லிங் என்று கூப்பிடுகிறீர்களே! உங்களுக்கு மனைவியின் பெயரில் அன்பு குறையவே இல்லை என்று தெரிகிறது”.

  கணவர் சொன்னாராம்: “வெளியில் சொல்லாதே! அவள் பெயரை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன
  அம்மா நினைத்து நினைத்து சிரிப்புத்தான் வருகிறது நல்ல நகைச்சுவை,பின்னூட்டம் எழுதும் போதும் சிரிப்புத்தான் பாராட்டுக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s