மாலைப்பொழுதினிலே……மலரும் நினைவுகள்!

220px-Ms_subbulakshmi

திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தேன் குரலில் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ‘கொசுவர்த்தி சுருள்’ தான்.

இந்தப் பாட்டை நான் பாடி, நடனம் அமைத்து…. அடடா என்ன இனிமையான நினைவுகள்!

அப்போது புரசைவாக்கத்தில் இருந்தோம். என் அண்ணா, அவனது நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஒரு ‘ரிக்ரியேஷன் க்ளப்’ ஆரம்பித்தனர். பெயர் என்ன வைக்கலாம் என்று யோசித்த போது என் அண்ணா ஒரு பேப்பரில் எழுதினான். “ELITE RECREATION CLUB” உடனே நான் படித்தேன்: எலைட் ரிக்ரியேஷன் க்ளப் என்று. என் அண்ணாவுக்கு வந்ததே கோவம்!

‘ச்சே! என்ன படிக்கிற, எலைட் –ஆ? எடு, எடு டிக்ஷ்னரியை. உச்சரிப்பு பாரு. எலைட்டாம் எலைட்டு!’

எனக்குப் புரிந்து விட்டது தவறான உச்சரிப்பு என்று. எழுந்து போய் டிக்ஷ்னரியை எடுத்து வந்து உச்சரிப்புப் பார்த்துவிட்டு சொன்னேன். ‘எலீட்  ரிக்ரியேஷன் க்ளப்’. அண்ணாவின் முகம் மலர்ந்தது.

‘பேரு நன்னாருக்கு இல்ல?’

அர்த்தம் புரிந்தால்தானே? ‘ஓ!’ தலையாட்டி விட்டேன். அர்த்தம் புரியவில்லை என்றால் மறுபடி டிக்ஷ்னரி எடு என்பான்.

க்ளப் ஆரம்பித்தாயிற்று. மாதம் ஒரு முறை சந்தித்தோம், எங்கள் வீட்டில் தான். ஏதாவது செய்ய வேண்டுமே. என்ன செய்யலாம்?

கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிக்கலாம். கதை, கவிதை யார் யாருக்கு என்னென்ன வருமோ அதை எழுதிக் கொண்டு வரலாம். எல்லோருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.

எல்லோரும் கொண்டு வருவதை அழகாக தைத்து படிக்கும் படி செய்ய வேண்டியது என் வேலை. என் அக்கா பாதுகா பட்டாபிஷேகம் எழுதினாள். அதற்கு பரதன் தலைமேல் பாதுகையை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போகிறாப்போல படம் வரைந்து கொடுத்தேன் நான். முதல் இதழே வெற்றிகரமாக அமைந்து விட்டது. மாதாமாதம் கையெழுத்துப் பத்திரிகை வர ஆரம்பித்தது. நான் எதுவும் எழுத மாட்டேன்; எனக்குப் படித்த கல்கியின் கதாபாத்திரங்கள் ஆன நந்தினி, குந்தவை இவர்களை வரைந்து கொடுப்பேன்.

நாடகம் போடலாம் என்று அடுத்த முடிவு. வெறும் நாடகம் மட்டுமில்லாமல் நடனம், பாடல், நாடகம் எல்லாம் இருக்கட்டும் என்று முடிவு செய்தோம்.

நான் அப்போது எஸ் எஸ் எல் ஸி படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் ‘Merchant of Venice’ நாடகம் வந்திருந்தது – நீதி மன்றக் காட்சி மட்டும்.  ஏற்கனவே பள்ளிக் கூடத்தில் ஒரு முறை நான் நடித்து அரங்கேறிய நாடகம். நான்தான் கதாநாயகி போர்ஷியா. அவள் நீதி மன்றத்தில் பேசும் பேச்சு மிகப் பிரபலம். கிட்டத்தட்ட மோனோ ஆக்டிங். அதையே திரும்ப செய்துவிடு என்றார்கள்.

இசை? நான் மிகவும் விரும்பிப் பாடும் பாடல் ‘மாலைப்பொழுதினிலே ஒரு நாள்…’ அதைப் பாடுகிறேன் என்றேன்.

அண்ணாவின் நண்பர்களில் ஒருவர் சொன்னார். அதற்கே நடனமும் இருந்தால் நன்றாக இருக்கும். அது வள்ளியும், முருகனும் உரையாடுவதுபோல அமைந்த பாடல். கல்கி அவர்கள் இயற்றியது.

நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு இரண்டு பெண்கள் விஜயா, அல்லி என்று. விஜயா பெரியவள். அல்லி அவள் தங்கை. சரி அல்லியை வள்ளியாகவும், விஜயாவை முருகனாகவும் வைத்துக் கொண்டு நடனம் அமைக்கலாம் என்று தீர்மானம் செய்தோம். நடன ஆசிரியர்?

நானே முன்வந்தேன். எங்கள் பள்ளியில் நடன நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். அவற்றில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் ரிகர்சலை பலமுறை பார்த்து ரசிப்பேன். எங்கள் பாட்டு டீச்சர் திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன் மிக அருமையாக பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதத்திற்கு’ மெட்டமைத்து, நடனமும் வடிவமைத்து இருந்தார். அவற்றை வீட்டில் வந்து ஆடுவேன்.

இந்த அனுபவம் போதாதா? தினமும் விஜயாவிற்கும் அல்லிக்கும் பயிற்சி கொடுத்தேன்.

எங்கள் நிகழ்ச்சி ஸர் எம்.சி.டி.எம். முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வகுப்பறை ஒன்றில் நடந்தேறியது வெற்றிகரமாக! முதல்முறையாக ‘மைக்’ கில் பாடினேன். பக்கவாத்தியங்கள் கிடையாது. சோலோ பாட்டு மட்டும். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நரசிம்மன் தலைமை தாங்கினார். எங்கள் எல்லோரையும் பாராட்டி, வாழ்த்திவிட்டு சென்றார்.

அதற்குப் பிறகு எங்கள் க்ளப் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அண்ணாவிற்கு வேலை கிடைத்து தும்பா (கேரளா) சென்றான். எனக்கு வேலை கிடைத்தது. ஒவ்வொருவராக விலக, நினைவுகள் மட்டுமே மிச்சம்.

இந்தப் பாட்டை முழுமையாக கேட்க (என் குரலில் இல்லீங்க!) திருமதி எம்.எஸ். குரலில் இங்கே க்ளிக் செய்யவும்.

என் விருப்பத்திற்காக இந்த முழு பாடலையும், பாடல் வரிகளுடன் தங்கள் இசைப்பா தளத்தில் போட்டிருக்கும் திரு தமிழுக்கும், திரு ஓஜஸ்ஸுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

 

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

Advertisements

10 thoughts on “மாலைப்பொழுதினிலே……மலரும் நினைவுகள்!

  1. எனக்கும் ஆசைதான். ஸ்கேன் எடுத்துப் போடவேண்டுமென்று. 71, 72 ஆம் வருடம் வரைந்த ஓவியங்கள். ஸ்கேன் செய்தாலும் எப்படி வருமோ என்று யோசனையாக இருக்கிறது.

   கட்டாயம் முயற்சிக்கிறேன்.

 1. அந்தக் காலகட்டத்தில் எனக்குப் பெயர் ‘முந்திரிக்கொட்டை’!
  எல்லாத்துக்கும் நான், நான் என்று வந்து வந்து நிக்கும் என்று திட்டுவார்கள், பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி!

  Jack of all trades தான் எப்பவுமே!
  நன்றி அனு பெயரை மாற்ற யோசித்ததற்கு!

 2. என் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் சசி!
  இன்னும் அந்த முந்திரிக்கொட்டைத தனம் போகவில்லை.
  இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது!
  நன்றி சசி!

  1. நல்ல யோசனைதான்.
   17 வயதில் வரைந்த ஓவியங்கள் திரும்பவும் அதேபோல வரைய வருமா, தெரியவில்லை.
   முயற்சிக்கிறேன்.
   நன்றி இராஜராஜேஸ்வரி

 3. ஆஹா! நீங்க சகலகலாவல்லி போல இருக்கேம்மா!! நடனம் பாட்டு, வடிவமைப்பு, ஓவியம்.. சின்ன வயசுல ரொம்ப கலக்கி இருக்கீங்க… உங்கள் அனுபவம் படிக்க படிக்க ரொம்ப இனிமையா இருக்கு.. என்னுடைய சிறுவயது நியாபகம் வருகிறது…
  பகிர்ந்ததற்கு மிக்க நன்றிம்மா!!

 4. திருமதி அனுஸ்ரீனிக்குக் கொடுத்த பதிலையே உனக்கும் கொடுக்கிறேன் சமீரா!
  உன்னுடைய அடுத்த பதிவில் உன் சிறுவயது நினைவை பகிர்ந்து விடு சமீரா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s