சி.டி.எஸ். காசோலை: 2013 டிசம்பர் 31 வரை நீடிப்பு..!

 

முன்னிலும் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சி.டி.எஸ். காசோலைகளை (CTS – Cheque Truncation System – 2010} 2013 ஜூலை 31ம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த தொடங்க வேண்டும் என  ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இப்போது இது இன்னும் ஆறு மாதக் காலம், அதாவது 2013 டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலை களை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன் செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு வங்கிகள் அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தந்த வங்கிகளுக்கு காசோலைகளின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிகள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையென்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும். இந்த நடைமுறையைத்தான் கடந்த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.

 

இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியின் காசோலையும் வித்தியாசமாக உள்ளது. தேதி, வாடிக்கையாளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ்வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலைகளை சரிபார்க்க காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோலைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.

 

இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுதுவதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய்டு (ஸ்ஷீவீபீ) என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வங்கிகளில் காசோலை களின் இமேஜை ஸ்கேன் செய்யும்போதே போலிகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

 

புதிய சி.டி.எஸ். காசோலைகள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெனவே உள்ள காசோலைகளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பித்து பெறலாம்.

 

சி.டி.எஸ். காசோலைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கை யாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்டணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாளருக்குச் சாதகமான விஷயங்கள்.அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழுதும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத்தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலைகளை வங்கி ஏற்காது’

 

இவ்வளவு அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த சி.டி.எஸ். காசோலைகளை (CTS – Cheque Truncation System – 2010} 2013 ஜூலை 31ம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த தொடங்க வேண்டும் என என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால் இப்போது இது இன்னும் ஆறு மாதக் காலம், அதாவது 2013 டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. அது வரைக்கும் கடனுக்கான முன்தேதி இட்ட சி.டி.எஸ். அல்லாத காசோலைகளை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது..

 

RBI eases process of phasing out non-CTS cheques

************************************************************

After extending the deadline for withdrawal of the residual non-Cheque Truncation System (CTS) 2010 standard cheque from March 31 to July 31, 2013, the Reserve Bank of India (RBI) has now introduced separate clearing session at three CTS centres of Mumbai, Chennai and New Delhi for clearing residual non-CTS 2010 instruments, including post-dated and EMI cheques with effect from January 1, 2014.–

http://en.wikipedia.org/wiki/Cheque_truncation_system

Advertisements

4 thoughts on “சி.டி.எஸ். காசோலை: 2013 டிசம்பர் 31 வரை நீடிப்பு..!

 1. வணக்கம்
  அம்மா

  வங்கியில் காசோலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள தகவல் மிக்க நன்றியம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. மிகவும் பயனுள்ள தகவல். சந்தோஷம்.

  ஒரு சின்ன சந்தேகம், எனக்கு.

  31.12.2013 க்குள் நாம் பயன்படுத்தாத பழைய காசோலைகளை வாங்கி வங்கிக்காரர்கள் என்ன செய்வார்களோ?

  காசோலைகளை கோசாலைகளுக்கு அனுப்பிவிடுவார்களா? ;)))))

  கோசாலையில் உள்ள ப்சுமாடுகள் அகத்திக்கீரையாக நினைத்து அவற்றைச் சாப்பிடுமா ?

  மொத்தத்தில் டன் டன்னாக பேப்பர் வேஸ்டேஜ் தான், என்னவோ போங்கோ. எப்படியோ ஒரு பதிவு தேறியவரை மகிழ்ச்சியே !

   1. All one wd want to do is to take out some money thro a cheque to buy all the trash periodicals strung across the face of the shop man – looks like even this is now in the mesh of simplification thro complex technology !

    Tirumanjanam Sundara Rajan Srirangam.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s