ஒரு ஊரில் பக்தர் ஒருவர் இருந்தார். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ‘பத்மனபோமரப் பிரபு’ என்பதை பத்மனபோ மரப்பிரபு என்று பிரித்து அங்கு ஒரு கோவிலில் இருந்த ஒரு மரத்தை ‘மரப்பிரபு, மரப்பிரபு’ என்று சொல்லியவாறே பிரதட்சணம் செய்து வந்தார். அந்த ஊரில் இருந்த ஒரு வித்வான் இதைப் பார்த்து ‘அட! அசடே! அது மரப்பிரபு இல்லை; அமரப் பிரபு . மரப்பிரபு, மரப்பிரபு என்று சொல்லிக் கொண்டு நீ இந்த மரத்தை சுற்றி சுற்றி வருவது பெரிய தவறு’ என்றார். இதைக்கேட்டவுடன் பக்தருக்கு ரொம்பவும் மன வருத்தம் ஏற்பட்டது. ‘இத்தனை நாள் தவறு செய்துவிட்டேனே’ என்று வருந்தி மரத்தை பிரதட்சணம் செய்வதை நிறுத்தி விட்டார்.
வைகுண்டத்திலிருந்து இதைப் பார்த்த பெருமாளுக்கும் மிகுந்த கோபம் ஏற்பட்டது. அந்த வித்துவானின் கனவில் தோன்றி, ‘எதற்காக நீ என் பக்தனை திருத்தப் போனாய்? மரப்பிரபு என்றாலும் என்னைத்தானே குறிக்கும்? அந்த மரத்தில் இருப்பவனும் நான்தானே? அவன் அவனுக்குத் தெரிந்த வகையில் என்னைப் பற்றி நினைத்தான். அதையும் கெடுத்தது விட்டாயே!’ என்று கோபித்துக் கொண்டாராம்.
தூணிலும், துரும்பிலும் இருப்பவர் மரத்தில் இருக்க மாட்டாரா? சரி இப்போது என்ன திடீரென்று இந்தக் கதை என்கிறீர்களா? ஆகஸ்ட் 25ஆம் தேதி ‘உலக வீட்டுத் தோட்ட தினம் என்று திருமதி கோமதி அரசு ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் இருக்கும் இன்னொரு இணைப்பையும் படியுங்கள்.
இந்தக் கதை பரமபதவாசி ஸ்ரீமான் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார் அவர்கள் எழுதிய ‘குறையொன்றுமில்லை’ தொடரில் வந்தது.
மண்,மரம், மழை என்று வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு .வின்சென்ட் அவர்கள் ஆகஸ்ட் தேதி 25 உலக வீட்டுத்தோட்டத்தினம் என்று சொல்லி ஒரு சிறு பதிவு போட்டு இருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த இரண்டு பதிவுகளையும் படித்தவுடன் நான் என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டாமா? எனக்கு என் வீட்டில் தோட்டம் போட இடமில்லை. அதனால் இந்தக் கதையைச் சொல்லி மரத்தினால் என்ன நன்மைகள் என்று எனக்கு வந்த ஒரு மின்மடலையும் இணைத்து ஒரு பதிவு போட்டுவிட்டேன்.
மரத்தினுள் இத்தனை விஷயங்களா…….?
ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும்.
பத்து ஏர்கண்டிஷனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரு மரம் தன் நிழல் மூலம் தருகின்றது.
சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன.
பிராண வாயுவின் மதிப்பு – 4.00 இலட்சம் ரூபாய்
காற்றைச் தூய்மை செய்வது – – 7.00 இலட்சம் ரூபாய்
மண்சத்தைக் காப்பது – 4.50 இலட்சம் ரூபாய்
ஈரப்பசையைக் காப்பது – 4.00 இலட்சம் ரூபாய்
நிழல் தருவது – 4.50 இலட்சம் ரூபாய்
உணவு வழங்குவது – 1.25 இலட்சம் ரூபாய்
பூக்கள் முதலியன – 1.25 இலட்சம்.
மரம் வளர்ப்போம்! வளம் காப்போம்!
இயற்கையை போற்றி திரு கவியாழி கண்ணதாசன் எழுதியிருக்கும் கவிதை யையும் படியுங்களேன்.
இந்த இரண்டு பதிவுகளையும் படித்தவுடன் நான் என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?//
அதானே ! ;))))) அருமையாக உங்கள் பங்கிற்கும் மரத்தை ஒரேயடியாக வெட்டிச்சாய்த்து விடாமல் ஏதேதோ சில நல்ல விஷயங்களும் கூறியுள்ளீர்கள். சந்தோஷம். நன்றி.
வாங்க கோபு ஸார்!
பதிவு போடவில்லைஎன்றால் வலைத்தளம் மறந்துவிடும் அபாயம் உண்டே!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நல்ல விஷயமாச்சே இன்றைக்கு மரம் பற்றிய கவிதையை என் தளத்தில் படியுங்கள்
வாங்க கண்ணதாசன்!
உங்களது கவிதைக்கும் இங்கு இணைப்பு கொடுத்துவிட்டேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அருமையான பதிவு.
கதைமிக பிரமாதம். மரத்தில் கடவுள் இருக்கிறார்.
வானமுட்டி பெருமாள் அத்திமரத்திலிருப்பார்.
என் பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி.
மரங்கள் நமக்கு எல்லா வளங்களையும் தருகிறது.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.
வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி!
உங்கள் பதிவைப் படித்துவிட்டு வருகையில் எனது இன்-பாக்ஸில் மரம் பற்றிய தகவல்.
இந்தக் கதையையும் சேர்த்து ஒரு பதிவாகப் போட்டுவிட்டேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
கிடைத்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒரு இடத்தில் தொகுத்து விட்டீர்கள்.
வாங்க ஸ்ரீராம்!
ரொம்ப நாட்கள் ஒன்றும் எழுதாமலிருந்தால் வலைத்தளம் எனக்கே மறந்துவிடுகிறதே!
நன்றி ஸ்ரீராம் வருகைக்கும், கருத்துரைக்கும்!
அம்மா நான் இருக்கும் ஊர்களில், என் வீட்டின் அருகே, கண்டிப்பாக ஏதாவது ஒரு மரம் இருக்கும்! ஒன்று, வேப்ப மரம் இல்லை ஆலமரம்! என்னுடைய மன நிலைக்கும், மரத்துக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கும். பச்ச பசேலுனு கண்ணுக்கு குளிர்ச்சியா,அடிக்கும் ஒவ்வௌரு காற்றுக்கு தலையாட்டி ரசிக்கும் மரத்தை யார் தான் ரசிக்காமல் இருப்பாங்க ! நல்லதொரு பதிவு அம்மா!!
கவியாழி கண்ணதாசன் பதிவை படித்து கருத்து அளித்து விட்டேன்.ரஞ்சனி.
சிந்திக்க வைக்கும் உங்கள் பதிவுக்கு கவியாழி கண்ணதாசன் எழுதியிருக்கும் கவிதை வலுச்சேர்க்கிறது.
இயற்கையை அழிக்க முயன்று
இயற்கையால் அழியவே இன்று
“மரம் வெட்டு நிகழ்வு!”
உங்கள் மரப்பிறப்பு கதை நிறையவே சிந்திக்க வைக்கிறது. அழகாய் இயற்கையை ரசிக்கும், நேசிக்கும், மதிக்கும் விதம் பற்றி சொல்லி விட்டீர்கள்.
கூடவே அழகாய் வேறு பதிவர்களுடைய இணைப்புகள் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.
கதை சூப்பரா இருக்கு.ஆகஸ்ட் 25 ல் ‘உலக வீட்டுத் தோட்ட தினம்’___ இப்போதான் கேள்விப்படுகிறேன்.
மரம் வளர்க்க முடியாது என்றாலும் நானும்கூட என் பங்கிற்கு நான்கைந்து தொட்டிகள் வாங்கி சமையலுக்குத் தேவையான சில செடிகள் வளர்த்து வருகிறேன்.
Reblogged this on ஊட்டி செய்திகள் and commented:
வெட்டாதீர்கள்…. எங்களை…. உயிரோடு வாழ விடுங்கள்….
வெட்டாதீர்கள்…. எங்களை…. உயிரோடு வாழ விடுங்கள்….