சூப் சாப்பிடாதீங்க!

soup

 

எப்போது ஹோட்டலுக்குப் போனாலும் சூப் சாப்பிடுபவரா  நீங்கள்? இப்போதெல்லாம் விருந்துகளிலும் சூப் வைக்கப்படுகிறது. இதைதவிர இப்போது பலவகை தயார் நிலை சூப் பவுடர்கள் கிடைக்கின்றன. இவற்றை நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்தால் சூப் ரெடி!

இந்த சூப் சாப்பிடுவதைப் பற்றி பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்  ஷைனி சந்திரன் சொல்வதை கேளுங்கள்.

“சூப்’ பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான் சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது.

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.

தினமும் சூப் பருகலாம் தவறில்லை.ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி,

வீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று பலர்  ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, “ரூல்ஸ்’ இருக்கிறது. ஆகவே, அதற்கு பதிலாக, சில பிராண்டுகளில், “மோனோ சோடியம் குளுடோமிட்’ கலந்திருக்கலாம்.

எனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.

சுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது.

சுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.

சில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.

சூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன் அதேபோல் இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, “பெஸ்ட்!’

அடுத்தமுறை சூப் சாப்பிடும்போது கவனமாக இருங்கள்.

சூப் சாப்பிடாதீங்க!” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. எல்லோருக்கும் இந்தப்பதிவின் மூலம் சூப் கொடுத்து, ஆனால் சாப்பிடாதீங்க என்கிறீர்கள். 😉

  ஆனால் எனக்குக் கவலையே இல்லை. நான் எந்த விருந்துகளுக்குப் போனாலும் சூப் பக்கம் போகவும் மாட்டேன். சாப்பிடவும் மாட்டேன்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  1. வாருங்கள் கோபு ஸார்!
   எல்லோருக்கும் கொடுத்தேனோ இல்லையோ, உங்களுக்குக் கொடுத்து உங்களை வரவழைத்து விட்டேன், பாருங்கள்!
   வருகைக்கும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 2. வணக்கம்
  அம்மா

  “மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்”
  நல்ல தகவல் இனி வேண்டும் போது பார்த்து வேண்டுகிறோம்
  வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 3. எனெக்கென்னமோ குளிர்தேசங்களில்தான் சூப் சாப்பிடலாம்(??!!) என்ற நினைப்பு.

  இந்தியாவில் அதுவும் சென்னையில் வேர்த்து ஊத்திக்கிட்டு இருக்கும்போது சூப் என்ன வேண்டிக்கிடக்குன்னு இருப்பேன்.

  அதான் வகைவகையா வேற உணவுகள் கிடைக்குதே அங்கே!

  1. வாருங்கள் துளசி!
   நல்ல கேள்வி கேட்டீங்க! நாங்க கூட சென்னையில் இருந்தவரை இந்த சூப் வகைகளை கொஞ்சம் அலட்சியமாகத் தான் பார்ப்போம். இங்கு வந்த பிறகு தான் இதன் அருமை – அதுவும் குளிர் காலத்தில் – தெரிந்தது.
   வருகைக்கும் சூப் பற்றிய சூப்பர் கேள்விக்கும் நன்றி!

 4. நல்ல தகவல் அம்மா! நாங்கள் எப்போதும் வீட்டு சூப் தான்!! எனக்கு சூப் போட சொல்லி குடுத்த என் மாமியாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்! மோனோ சோடியம் குளுடோமிட் தொல்லைகள் எதுவும் கிடையாது 🙂

  1. வாருங்கள் மஹா!
   நல்ல மாமியார், நல்ல மருமகள்! வீட்டிலேயே விதம் விதமான சூப் எப்படி செய்வது என்று பதிவு போடுங்களேன். இந்தப் பதிவில் இணைப்பு கொடுத்துவிடலாம்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   1. வீட்டிலேயே சூப் செய்வது எப்படி
    சூப்புக்கு தேவையான உங்கள் மனதுக்கு பிடித்த காய்கறியை இல்லை காய்கறிகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். காய்கறிகளை செலெக்ட் செய்யும் போது கவனம் தேவை, முள்ளங்கி, சௌசௌ போன்ற தண்ணீர் சத்து மிகுந்த காய்கறிகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது ஆஸ்துமா தொந்தரவு உடையவர்கள் அவற்றை சேர்க்காமல் சூப் செய்வது நலம். குழந்தைகள் நிறம் அழகாக இருந்தால் மிக மிக விரும்புவார்கள். அதற்கு பீட் ரூட் சேர்த்து கொள்ளலாம். மஷ்ரூம் சூப் செய்யும் போது அதை ஒரு ஸ்பூன் எண்ணெய்யில், அதன் தண்ணீர் வெளியேரும் வரை வதக்கி விட்டு பின்பு சூப் தயாரித்தால் சுவை நன்றாக இருக்கும். வயிறு புண் ஆற்ற விரும்புபவர்கள் முட்டைகோசை சூப் செய்து குடிக்க விரைவில் புண் ஆறும். மூக்கை மட்டும் சிறிது அமுக்கி புடித்து விட்டு குடித்தால், நிஜமாகவே முட்டைகோஸ் சூப் தேவாமிர்தமாக இருக்கும்.
    சூப்புக்கு தேவையான காய்கறிகளை எடுத்து நறுக்கி வைத்து கொள்ளுங்கள்
    ஒரு பல்லாரி, இல்லை 5 அல்லது 6 சின்ன வெங்காயம், ஒரு 6 அல்லது 7 பல் பூண்டை உரித்து, நறுக்கி வைத்து கொள்ளுங்கள்
    தண்ணீரை குக்கரில் கொதிக்க விட்டு அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு, வெங்காயம், பூண்டு, ஒரு தக்காளி, தேவையான அளவு உப்பு, மிளகு பொடி காரத்திற்கேட்ப,போட்டு விட்டு, வேண்டும் என்றால் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு, குக்கரை மூடி விசில் வந்த பின் ஒரு பத்து நிமிடம் குறைந்த தீயில் 10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
    சூடு ஆறட்டும் என்று ஒரு குட்டி தூக்கம் போட்டு விடாதீர்கள், பிறகு குக்கரின் உள்ளே தண்ணீரில் கலந்து விட்ட சத்துக்கள் அனைத்தும் திரும்பவும் காய்கறியின் உள்ளேயே சென்று விடும். அதனால் சூட்டோடு சூடாக, குக்கரை திறந்து, காய்கறிகளை நன்கு கரண்டியால் மசித்து,பின் வடிகட்டி, சக்கைகளை பிரித்து, சூப்பை தனியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள். சிறிது கெட்டியாக சூப் வேண்டும் என்று விரும்புவோர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் இல்லை ஒரு ஸ்பூன் கார்ன் ப்ளவர் போட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கலாம்.
    அதனால் சூப் யார் வேண்டுமானாலும் செய்யலாம், அவரவர் பிரியத்திற்கேட்ப 🙂

 5. தினமும் சூப் பருகலாம் தவறில்லை.ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி,//

  இது தான் உண்மை.
  எதையுமே நாமே அன்றன்றாடம் தயாரித்து, உண்பதே மேல்.
  செயற்கைச் சுவையூட்டிகள் சேர்பது உடலாரோக்கியத்துக்குக் கேடே!
  நாங்கள் அடிக்கடி சூப் தயாரிப்போம்,சூப்பில்லா விருந்தில்லை. எங்கள் சூப்பை பிரான்சியர்கள்
  விரும்பியுண்பர்.

  1. வாருங்கள் யோகன்!
   நான் என்றைக்கு உங்கள் சூப்பை ருசிக்கப் போகிறேன் என்று ஏக்கப்பட வைத்துவிட்டீர்களே!
   வருகைக்கும் சுவையான கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s