ஐயையோ ஆதார்!

pizza

 

வருடம் 2020

இடம் –  பீட்ஸா ஹட்

‘கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்……. கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்…….’

விடாமல் அடிக்கும் தொலைபேசியை எடுக்கிறார் அங்கிருக்கும் பெண்மணி.

பெ: ஹலோ…. பீட்ஸா ஹட்..!

வாடிக்கையாளர்: பீட்ஸா வேண்டும் …

பெ: பன்முறை பயன்பாட்டு ஆதார் அட்டையின் எண் கொடுங்கள், ஸார்.

வா: ஒரு நிமிடம் ….ஆங்…….என்னுடைய எண்:8898135102049998-45-54610

பெ: ஓகே ஸார். உங்கள் பெயர் மிஸ்டர் ஐயர். பெங்களூர் பனஷங்கரியிலிருந்து கூப்பிடுகிறீர்கள். வீட்டுத் தொலைபேசி எண்:…….அலுவலக எண்:… கைபேசி எண்:….. இப்போது வீட்டுத் தொலைபேசியிலிருந்து கூப்பிடுகிறீர்கள்.

வா: அட! ஆச்சரியமாயிருக்கே! எப்படி எனது எல்லா தொலைபேசி எண்களும் கிடைத்தன?

பெ: உங்கள் ஆதார் அட்டை எங்கள் கணனியின் தொடர்பில்  இருக்கிறது  ஸார்!

வா: ஓ! அப்படியா? குட்! இப்போது எனக்கு Seafood pizza வேண்டும்.

பெ: உங்களுக்கு இந்த பீட்ஸா சரிப்படாது, ஸார்!

வா: எப்படிச் சொல்லுகிறீர்கள்?

பெ: உங்களின் மருத்துவ அறிக்கைப்படி உங்களுக்கு மிக உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு இருக்கிறது.

வா: வேறு என்ன சிபாரிசு செய்கிறீர்கள்?

பெ: எங்களது ‘குறைந்த கொழுப்பு ஹாகீன் மீ’ பீட்ஸா  சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.

வா: அதெப்படி நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?

பெ: நேற்று நீங்கள் தேசிய நூலகத்திலிருந்து ‘குறைந்த கொழுப்பு சத்து கொண்ட ஹாகீன் மீ உணவுப்பொருட்கள் செய்வது எப்படி?’ என்ற புத்தகத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!

வா: அதுவும் தெரிந்துவிட்டதா? சரி ஃபேமிலி சைஸ் பீட்ஸா மூன்று கொடுங்கள்.

பெ: 10 பேர்கள் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு இந்த அளவு சரியாக இருக்கும் ஸார்! உங்கள் பில் தொகை ரூ. 2450/-

வா: கிரெடிட் கார்டில் பணம் கொடுக்கலாமா?

பெ: மன்னிக்கவும் ஸார். உங்கள் கடன் அட்டையில் அளவுக்கு அதிகமாக தொகை  எடுத்திருக்கிறீர்கள். போன அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,51,758/- பாக்கி வைத்திருக்கிறீர்கள்  –  கடன் கட்டத் தவறியதற்கான  தாமதத்தொகையை சேர்க்காமல்!

வா: ஓ! அப்போ பக்கத்திலிருக்கும் ATM போய் பணம் வாங்கி வருகிறேன்.

பெ: அதுவும் சாத்தியமில்லை, ஸார்! உங்களது  கணக்கு அறிக்கைப்படி, நீங்கள் இனிமேல் ATM-இல்  பணம் எடுக்க முடியாது. அங்கும் அதிகப்படியான பணத்தை எடுத்துவிட்டீர்கள்.

வா: பரவாயில்லை. பீட்ஸாக்களை அனுப்புங்கள். என்னிடம் பணம் இருக்கிறது. எத்தனை நேரம் ஆகும்?

பெ:45 நிமிடங்கள் ஆகும் ஸார். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றுக் கொண்டு போகலாம்.

வா: (அதிர்ச்சியாக) என்ன! மோட்டார் சைக்கிளா?

பெ: எங்களிடம் இருக்கும் விவரங்களின்படி உங்களிடம் 1123 என்ற எண்ணுள்ள மோட்டார் சைக்கிள் இருக்கிறது, ஸார்!

வா: ??????(ம்ம்ம்ம்ம்ம்ம் …இவங்களுக்கு என் மோட்டார் சைக்கிள் நம்பர் கூடத் தெரியமா?)

பெ: வேறு ஏதாவது வேண்டுமா ஸார்?

வா: ஒன்றுமில்லை…. இந்த பீட்ஸாக்களுடன் இலவசமாக  3 கோலா பாட்டில்கள் அனுப்பிவிடுவீர்கள், இல்லையா?

பெ: வழக்கமாக எல்லோருக்கும் அனுப்புவோம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அனுப்ப இயலாது ஸார்!

வாடிக்கையாளர் கோவம் தலைக்கேற கன்னாபின்னா வென்று திட்டுகிறார்.

பெ: உங்களை எச்சரிக்கிறேன் ஸார்!  2007 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி ஒரு காவல்துறை அதிகாரியை இதேபோல கன்னாபின்னாவென்று பேசியதற்காக 2 மாதங்கள் சிறை வாசத்துடன் ரூ 5000/- அபராதம் கட்டினீர்கள். மறக்க வேண்டாம்!

 

வாடிக்கையாளர் மயங்கி விழுகிறார்!

 

இந்தியா முன்னேற்றப்பாதையில்…….!

Advertisements

20 thoughts on “ஐயையோ ஆதார்!

 1. ஆதார் கார்டினால் இப்படி எல்லாம் கூட நடக்கலாம் யார் கண்டார்! அம்மா என் பிரியமான எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுத்துகளை மீண்டும் படித்ததை போல ஒரு உணர்வு.. கலக்கிடீங்க மா 🙂 இந்த பதிவை தந்த கைகளுக்கு ஒரு வளையல் செய்து போட ஆசை தான், இப்பொதைக்கு ஒரு லைக் மட்டும் 🙂

 2. அம்மா இந்த பதிவை என் முக புத்தகத்தில் ஷேர் செய்திருக்கிரேன் உங்கள் பெயரை போட்டு, வரும் பின்னூட்டங்களை எல்லாம் கண்டிப்பாக திருப்பி வந்து ஷேர் செய்கிரேன் 🙂

 3. ஐய்யைய்யோ! ஒன்றும் ஒளிக்க முடியாதே.
  இது எவ்வளவு நல்ல வாழ்வு நேர்மையாக வாழ.
  இப்படி வந்தால் தான் இந்த உலகம் திருந்தும் .
  இது எனக்குப் பிடித்திருக்கு.
  அருமையான பதிவு .
  இனிய வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  1. வாருங்கள் வேதா!
   கையில் தடி எடுத்தால்தான் அடங்கி ஒடுங்கி நடப்பேன் என்பது எத்தனை வருத்தமான விஷயம், இல்லையா?
   வருகைக்கும், பிடித்துப் படித்ததற்கும் நன்றி!

 4. ஆதார் அட்டையால் இவ்வளவு நன்மைகளா!
  நம் உடல் நலத்தில், நம் பணவரவு செலவை கவனமாய் கையாள, நம்மை பற்றிய செய்திகளை புள்ளிவிவரத்துடன் சொல்கிறதே ஆதார அட்டை!.
  !
  மகிழ்ச்சி.
  அருமையாக எழுதிருக்கிறீர்கள்.

  1. வாங்க கோமதி!
   நீங்கள் ரொம்பவும் நல்லவர். அதனால் இந்த அட்டையால் வரும் நன்மைகளைப் பார்க்கிறீர்கள். பலருக்கும் இது ஒரு கிலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை!
   வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

 5. ஹாஹா, ஆதார் அட்டை வாங்கினால் நோபல் பரிசு கிடைச்சாப்போல! அவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு. கஷ்டப்பட்டு ஆதார் அட்டையும் வாங்கிட்டு, நம்ம தனிப்பட்ட விஷயம் எல்லாம் தெரிஞ்சு வைக்கிறதுன்னா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேணாம் போங்க! :))))

 6. அம்மா என் முக புத்தகத்தில் ஷேர் செய்ததில், 13 பேர் லைக் செய்திருந்தனர். 2 நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்தனர் 🙂 உங்கள் அடுத்த பதிவான கிணற்றுக்குள் சொம்பும் சூப்பர் டூப்பர் 🙂 ஏமாத்திவிட்டீர்களே அம்மா, நான் எத்தனை நாள் நீங்க வருவீங்க வருவீங்க என்று என் முக புத்தகத்தில் வழி மே விழி வைத்து காத்து கொண்டிருந்தேன் தெரியுமா 😦

 7. எங்க ஜாதகத்தை எல்லாம் ஏற்கனவே இங்கே கொடுத்தாச்சு, ஹா ஹா .நீங்களூம் சீக்கிரமே கொடுத்து வாங்கிடுங்க. (யான் பெற்ற இன்பம் பெறூக நீங்களூம்) ஐ பேடில் இருந்து டைப் செய்வதால் பிழை வருகிறது, பொறூத்துக்கோங்கோ!

 8. அற்புதமான ஹாஸ்யமாக எதார்த்தத்தை எதிர்காலத்தை பதிவு செய்துள்ளீர்கள் உங்க அனுமதி கேட்காமலே உங்க பேரோடத்தான் ( காப்பி ரைட் கோர்ட் வழக்குன்னு போய்ட கூடாதுன்னு ஒரு முன்ஜாக்கிரதாதான்) என் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன் (இந்த பிளாக் லிங்) இன்னும் உங்க பிளாக் பூரா படிக்கல நிதானமா படிக்கறேன் அப்பப்ப

  1. வாருங்கள் சுவாமி சுஷாந்தா,
   இந்தக் கட்டுரையை படித்து ரசித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
   நிதானமாக படித்துப் பார்த்து இதேபோல கருத்தும் சொல்லலுங்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s