Tag Archives: இசைப்பா

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா

 

 

 

 

 

 

 

 

முதலாண்டு நிறைவைக் கொண்டாடும் இசைப்பா விற்கு வாழ்த்துகள்!

valentines day

இசைப்பாவில் எனது பங்களிப்பு

ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பாடல்களை ரசிப்பார்கள். நாங்கள் தும்கூரில் இருந்தபோது என்னுடன் ஆசிரியை ஆக இருந்த  தோழி உமா கேளடி கண்மணி’ படத்தில் வரும் ‘நீ பாதி, நான் பாதி’ பாடலை எப்படி ரசிப்பார் தெரியுமா? அவர் சொல்வார்: ‘இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். ‘நீ பாதி நான் பாதி கண்ணே’ என்று அந்த ‘கண்ணே’ வை அப்படியே காற்றில் ஊதி விடுவதுபோலப் பாடுவார். அது அப்படியே மிதந்து கொண்டு நிற்கும்’ இப்படிக் கூட பாடலை ரசிக்க முடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்தியவர் உமா. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தவறாமல் இவரை நினைத்துக் கொள்ளுவேன்.

பொதுவாக பாடல் பாடும்போது கடைசி வார்த்தையை கொஞ்சம் இழுத்தாற்போல பாடி முடிப்பார்கள். இந்தப் பாடலில் ஜேசுதாஸ் அப்படி இழுக்காமல் அந்த வார்த்தையை அப்படியே விட்டுவிடுவார். மிகத் திறமை வாய்ந்த, இசையை தன் வசம் கொண்டு வர ரொம்பவும் கடுமையாக உழைத்த ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம்.

இவரைப் போலவே குரலை தன் வசப்படுத்தி, தன் பாட்டு மூலம் கேட்பவர்களை தன்வயப்படுத்தும் இன்னொரு பாடகர்  நான் மிகவும் ரசிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் திரு ஹரிஹரன்.

இன்றைய இசைப்பாவில் நான் பகிரப்போகும் பாடல் ‘சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா’ பாடல். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் வரும் பாடல் இது. பின்னணி இசை எதுவுமில்லாமல் வெறும் சுருதி மட்டும் ஒலிக்க ஹரிஹரன் பாடியிருப்பார். பாடும் பாட்டில் பாவத்தையும் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே.

 

தொடர்ந்து படித்து பாடலை ரசிக்க : சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா 

கண்ட நாள் முதலாய்……

இசை வணக்கம். விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

எங்கள் ஊரில் (பெங்களூர்) வருடாவருடம் ஸ்ரீராம நவமி கச்சேரிகள் நடக்கும். ஃபோர்ட் ஹை ஸ்கூல் மைதானத்தில் – ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லை; ஒரு மாதம் – ஒன்றரை மாதம் தினமும் காலை, பிற்பகல், சாயங்காலம் என்று மூன்று வேளை.

Sudha Ragunathan

நமக்கு தமிழ் வருடம் பிறப்பதற்கு முன் இங்கு யுகாதி பிறந்துவிடும். அதேபோல ஸ்ரீராம நவமியும் முன்னாலேயே வந்துவிடும். எங்களவர் எனக்கு பாஸ் வாங்கிக் கொடுத்துவிடுவார். நம் ஊர் பிரபலங்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். எனக்கு மிகவும் பிடித்த திருமதி சுதா ரகுநாதனின்கச்சேரியை தவறவே விடமாட்டேன். இன்னொன்று விஷயமும் நடக்கும். ஒரு கச்சேரிக்கு வருபவர்கள் அடுத்தடுத்த நாட்களில் வேறு வேறு இடங்களில் பாடுவார்கள். நான் திருமதி சுதாவை விடாமல் அவர் எங்கு பாடுகிறார்  என்று செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டு தொடருவேன்.

 

தொடர்ந்து படிக்க, கண்டநாள் முதலாய் பாடலைக் கேட்க: இசைப்பா