நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ்வுலகு.
எல்லோருக்கும் தெரிந்த குறள் தான் இது.
யாருக்கு, எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நிலையில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் இருக்கும்போதும் வெளியில் செல்லும்போதும், ஏன் சுற்றுலா செல்லும்போது கூட நாம் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம், இல்லையா?
அப்போது உதவிக்கு யாரை அழைப்பது? அதற்கென சில எண்கள் இருக்கின்றன. இவற்றை அழைக்க உங்கள் செல்போன்களில் கரன்சி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும்.
எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன.
காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.
அவசர போலிஸ் உதவிக்கு 100
தீயணைப்புத் துறைக்கு 101
போக்குவரத்து முறைகேட்டிற்கு 103
ஆம்புலன்ஸ் உதவிக்கு 108
குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098
பெண்களுக்கான உதவிக்கு 1091
முதியோருக்கான உதவிக்கு 1253
மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093
விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700
ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று
ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது. இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது?
அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112. இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள்.
நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர்.
இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்.
தகவல் உதவி நன்றி: திரு அனந்தநாராயணன்