
வருடம் 2020
இடம் – பீட்ஸா ஹட்
‘கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்……. கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்…….’
விடாமல் அடிக்கும் தொலைபேசியை எடுக்கிறார் அங்கிருக்கும் பெண்மணி.
பெ: ஹலோ…. பீட்ஸா ஹட்..!
வாடிக்கையாளர்: பீட்ஸா வேண்டும் …
பெ: பன்முறை பயன்பாட்டு ஆதார் அட்டையின் எண் கொடுங்கள், ஸார்.
வா: ஒரு நிமிடம் ….ஆங்…….என்னுடைய எண்:8898135102049998-45-54610
பெ: ஓகே ஸார். உங்கள் பெயர் மிஸ்டர் ஐயர். பெங்களூர் பனஷங்கரியிலிருந்து கூப்பிடுகிறீர்கள். வீட்டுத் தொலைபேசி எண்:…….அலுவலக எண்:… கைபேசி எண்:….. இப்போது வீட்டுத் தொலைபேசியிலிருந்து கூப்பிடுகிறீர்கள்.
வா: அட! ஆச்சரியமாயிருக்கே! எப்படி எனது எல்லா தொலைபேசி எண்களும் கிடைத்தன?
பெ: உங்கள் ஆதார் அட்டை எங்கள் கணனியின் தொடர்பில் இருக்கிறது ஸார்!
வா: ஓ! அப்படியா? குட்! இப்போது எனக்கு Seafood pizza வேண்டும்.
பெ: உங்களுக்கு இந்த பீட்ஸா சரிப்படாது, ஸார்!
வா: எப்படிச் சொல்லுகிறீர்கள்?
பெ: உங்களின் மருத்துவ அறிக்கைப்படி உங்களுக்கு மிக உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு இருக்கிறது.
வா: வேறு என்ன சிபாரிசு செய்கிறீர்கள்?
பெ: எங்களது ‘குறைந்த கொழுப்பு ஹாகீன் மீ’ பீட்ஸா சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.
வா: அதெப்படி நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?
பெ: நேற்று நீங்கள் தேசிய நூலகத்திலிருந்து ‘குறைந்த கொழுப்பு சத்து கொண்ட ஹாகீன் மீ உணவுப்பொருட்கள் செய்வது எப்படி?’ என்ற புத்தகத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!
வா: அதுவும் தெரிந்துவிட்டதா? சரி ஃபேமிலி சைஸ் பீட்ஸா மூன்று கொடுங்கள்.
பெ: 10 பேர்கள் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு இந்த அளவு சரியாக இருக்கும் ஸார்! உங்கள் பில் தொகை ரூ. 2450/-
வா: கிரெடிட் கார்டில் பணம் கொடுக்கலாமா?
பெ: மன்னிக்கவும் ஸார். உங்கள் கடன் அட்டையில் அளவுக்கு அதிகமாக தொகை எடுத்திருக்கிறீர்கள். போன அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,51,758/- பாக்கி வைத்திருக்கிறீர்கள் – கடன் கட்டத் தவறியதற்கான தாமதத்தொகையை சேர்க்காமல்!
வா: ஓ! அப்போ பக்கத்திலிருக்கும் ATM போய் பணம் வாங்கி வருகிறேன்.
பெ: அதுவும் சாத்தியமில்லை, ஸார்! உங்களது கணக்கு அறிக்கைப்படி, நீங்கள் இனிமேல் ATM-இல் பணம் எடுக்க முடியாது. அங்கும் அதிகப்படியான பணத்தை எடுத்துவிட்டீர்கள்.
வா: பரவாயில்லை. பீட்ஸாக்களை அனுப்புங்கள். என்னிடம் பணம் இருக்கிறது. எத்தனை நேரம் ஆகும்?
பெ:45 நிமிடங்கள் ஆகும் ஸார். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றுக் கொண்டு போகலாம்.
வா: (அதிர்ச்சியாக) என்ன! மோட்டார் சைக்கிளா?
பெ: எங்களிடம் இருக்கும் விவரங்களின்படி உங்களிடம் 1123 என்ற எண்ணுள்ள மோட்டார் சைக்கிள் இருக்கிறது, ஸார்!
வா: ??????(ம்ம்ம்ம்ம்ம்ம் …இவங்களுக்கு என் மோட்டார் சைக்கிள் நம்பர் கூடத் தெரியமா?)
பெ: வேறு ஏதாவது வேண்டுமா ஸார்?
வா: ஒன்றுமில்லை…. இந்த பீட்ஸாக்களுடன் இலவசமாக 3 கோலா பாட்டில்கள் அனுப்பிவிடுவீர்கள், இல்லையா?
பெ: வழக்கமாக எல்லோருக்கும் அனுப்புவோம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அனுப்ப இயலாது ஸார்!
வாடிக்கையாளர் கோவம் தலைக்கேற கன்னாபின்னா வென்று திட்டுகிறார்.
பெ: உங்களை எச்சரிக்கிறேன் ஸார்! 2007 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி ஒரு காவல்துறை அதிகாரியை இதேபோல கன்னாபின்னாவென்று பேசியதற்காக 2 மாதங்கள் சிறை வாசத்துடன் ரூ 5000/- அபராதம் கட்டினீர்கள். மறக்க வேண்டாம்!
வாடிக்கையாளர் மயங்கி விழுகிறார்!
இந்தியா முன்னேற்றப்பாதையில்…….!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...