Category Archives: Uncategorized

உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்புவோம், வாருங்கள்!

ranjani narayanan

twins 1

படம் உதவி, நன்றி: கூகிள்

போனவாரம் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் அந்தப் பெண். ஒரு ஆண், ஒரு பெண் என்று நான்கு வயதிலும் 2 வயதிலுமாக இரண்டு குழந்தைகள். என்னை மிகவும் கவர்ந்தது அந்த இரண்டாவது குழந்தை – பெண் குழந்தை. ஏற்கனவே பார்த்திருந்ததால் தயக்கம் இல்லாமல் என்னிடம் வந்தது. சென்ற முறை பார்த்திருந்த போது அதற்கு ஒரு பாட்டு –

‘பரங்கிக்காய பறிச்சு

பட்டையெல்லாம் சீவி,

பொடிப்பொடியா நறுக்கி,

உப்பு காரம் போட்டு

இம்(ன்)பமாகத் திம்(ன்)போம்.

இன்னும் கொஞ்சம் கேட்போம்,

குடுத்தா சிரிப்போம்;

குடுக்காட்டி அழுவோம்!’

– அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்திருந்தேன். என்னைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து தனது சின்னக்கைகளால் அந்த பாட்டிற்கு அபிநயம் செய்ய  ஆரம்பித்தது. அப்படியே அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டேன். அது இப்போது புதிதாக ஒருபாட்டைப் பாடக் கற்றுக்கொண்டுள்ளது. ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாட்டு.

மழலையில் அது பாடும்போது வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை. ‘ல்லோ….ல்லோ’ மட்டும் நன்றாகக் கேட்டது. குழந்தையின் குரலில் பிடிக்காத பாட்டும் பிடித்ததாயிற்று. தேன் போல இனிக்கும் குரலில் வார்த்தைகளை முழுங்கி முழுங்கி, வாயில் ஜொள்ளு வழிய அது பாடியது ‘குழலினிது யாழினிது’ என்ற குறளை நினைவிற்குக் கொண்டு வந்தது.

துளிக்கூட தயக்கம் இல்லாமல் எல்லோருடன் பழகியது. வாய் ஏதோ ஒரு பாட்டை பொரிந்து கொண்டே இருந்தது. ஏ,பி,ஸி,டி., பாபா ப்ளாக் ஷீப், என்று வீட்டைச் சுற்றிச்சுற்றி பாடியபடியே வளைய…

View original post 508 more words

Advertisements

நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன?

ranjani narayanan

மிரட்டப் போகும் இணையக் கட்டணம்

இந்திய இணையப் பயனாளர்கள் தலையில் இடியை இறக்கப் போகும் செய்தி தான் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது. நடக்கப் போவதை நினைத்துப் பதட்டத்தில் பலரும், என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலே குழப்பத்தில் பலரும் ஆழ்ந்துள்ளனர்

 என்ன பிரச்சனை?

மொபைல் நிறுவனங்கள் WhatsApp, Skype, Viber போன்ற நிறுவனங்களின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க TRAI அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளன.

இதை TRAI அமைப்பு பொதுமக்களின் பார்வைக்குக் கொடுத்து கருத்துகளை வரவேற்றுள்ளது. ஏப்ரல் 24 ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு மே மாதம் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்தப் பிரச்சனை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். என்ன செய்யணும் என்று கூறினால் மட்டும் போதும் என்பவர்கள் நேராக இறுதிக்குச் சென்று விடலாம்.

TRAI (Telecom Regulatory Authority of India – தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) என்றால் என்ன?

தொலைத்தொடர்பு சேவைகளின் செயல் பாட்டினை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பு இது.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் என்ன நடக்கும்?

நீங்கள் WhatsApp, Skype, Viber போன்றவற்றைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

உங்கள் இணைய இணைப்பு நிறுவனம் (Internet Service Provider)  அனுமதிக்கும் தளங்களை / செயலியை (App) மட்டுமே…

View original post 1,860 more words

10 நிமிடங்களில் உங்கள் பாஸ் வோர்ட்டை திருடலாம். எப்படி?

password

 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

 

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய பாதுகாப்பை தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

 

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.

 

உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

 

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.

 

அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?

 

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

 

6 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10மணி நேரம்+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்.

 

7 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்+ பெரிய எழுத்துடன்(Upper Case) : 23 நாட்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்.

 

8 எழுத்துக்கள் – சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்+ எண்கள், குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

 

9 எழுத்துக்கள் – சிறிய எழுத்துக்கள் (Lower Case): 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள் குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

 

 தகவல் நன்றி : திரு அனந்தநாராயணன்

நான் மலாலா – புத்தகம்

 

ஆழம் நவம்பர்  இதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரை

மலாலாவும் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் கிறிஸ்டினா லேம்ப் என்பவரும் இணைந்து எழுதிய ‘நான் மலாலா’ (உப தலைப்பு: கல்விக்காகக் குரல் கொடுத்து தாலிபன்களால் சுடப்பட்ட பெண்) அக்டோபர் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. ‘இன்றுதான் புத்தகம் வெளியாகியுள்ளது. அதற்குள்  இதற்குக் கிடைத்திருக்கும் மக்களின் அமோக ஆதரவு ஆச்சரியப்பட வைக்கிறது’, என்கிறார் இஸ்லாமாபாத்தில் இருக்கும் மிஸ்டர் புக்ஸ் புத்தகக்கடையின் விற்பனையாளர். ‘நானும் ஒரு பெண்ணாக இருப்பதால், மலாலாவுக்கு என் ஆதரவு உண்டு. பெருமையும் புகழும் அந்தப் பெண்ணுக்குச் சேரட்டும்!’

லிட்டில் பிரவுன் அண்ட் கம்பெனி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை உடனே தடை செய் என்கிறது தாரிக் இ தாலிபான். மீறி வாங்குபவர்கள் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல்லா ஷாஹித் கூறுவதைக் கவனியுங்கள். ‘மலாலா எந்த வீரச் செயலும் செய்யவில்லை; இஸ்லாமை மதச்சார்பின்மை என்ற பெயரில் பண்டமாற்று வியாபாரம் செய்துவிட்டாள். இதற்கு அவளுக்கு இஸ்லாமின் விரோதிகளிடமிருந்து விருது கிடைத்திருக்கிறது’. கூடவே ஒரு எச்சரிக்கை. ‘மலாலாவைக் கொல்வதற்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால் நிச்சயம் தவறவிடமாட்டோம். அவள் எழுதிய புத்தகத்தை வாங்குபவர்களையும் நாங்கள் குறி வைப்போம்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கைக்குப் பலனும் கிடைத்திருக்கிறது. பெஷாவரில் உள்ள ஒரு பெரிய புத்தகக் கடை மலாலாவின் புத்தகத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. ‘பலர் எங்களை தொலைபேசியில் அழைத்து இந்தப் புத்தகம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இதன் விநியோகிப்பாளர் யார் என்று தெரியாது என்று சொல்லிவிடுகிறோம்’ என்கிறார் புத்தகக் கடையின் சொந்தக்காரர்.

படிக்காத ஒரு அம்மாவுக்கும், பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்த ஒரு அப்பாவுக்கும் பிறந்தவள் மலாலா. தனது 11 வது வயதிலேயே ஸ்டீஃபன் ஹாகிங்ஸ் எழுதிய ‘எ ப்ரீப் ஸ்டோரி ஆப் டைம்’ என்ற புத்தகத்தை படித்தவள். கேட்பவரை மயக்கும் பேச்சு வல்லமை கொண்ட இந்தப் பெண் தனது வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

புத்தகத்திலிருந்து சில வரிகள்:

‘நடு இரவில் உதயமான நாட்டில் பிறந்தவள் நான். ஒரு நண்பகலில் கிட்டத்தட்ட இறந்து பிழைத்தவள்’

‘ஆண் குழந்தைகளைக் கொண்டாடும் சமூகத்தில் நான் பிறந்தபோது என் அம்மாவை எல்லோரும் ‘பெண் குழந்தையா?’ என்று துக்கம் விசாரித்தனர். என் அப்பாவை யாரும் வாழ்த்தவில்லை.’

‘நான் படிக்கும் புத்தகங்களில் வரும் காட்டேரிகள் போன்ற தாலிபன்கள் பெண்களின் பள்ளிக்கூடங்களை அழித்தனர். இசையையும், காணொளிகளையும் தடை செய்தனர். பழம் பெருமை வாய்ந்த புத்தர் சிலைகளை குண்டு போட்டு தகர்த்தனர். ஆனால் எதையும் புதிதாக உருவாக்கவில்லை’

‘என்னைச் சுடுவதன் மூலம் மக்களின் குரல்வளையை நெறித்து விடலாம்; யாரும் இதைப் பற்றிப்பேச மாட்டார்கள் என்று நினைத்தனர். இப்போது ஏன் என்னை சுட்டோம் என்று வருந்திக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.’

 

 

 

 
 

சி.டி.எஸ். காசோலை: 2013 டிசம்பர் 31 வரை நீடிப்பு..!

 

முன்னிலும் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சி.டி.எஸ். காசோலைகளை (CTS – Cheque Truncation System – 2010} 2013 ஜூலை 31ம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த தொடங்க வேண்டும் என  ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இப்போது இது இன்னும் ஆறு மாதக் காலம், அதாவது 2013 டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலை களை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன் செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு வங்கிகள் அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தந்த வங்கிகளுக்கு காசோலைகளின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிகள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையென்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும். இந்த நடைமுறையைத்தான் கடந்த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.

 

இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியின் காசோலையும் வித்தியாசமாக உள்ளது. தேதி, வாடிக்கையாளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ்வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலைகளை சரிபார்க்க காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோலைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.

 

இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுதுவதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய்டு (ஸ்ஷீவீபீ) என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வங்கிகளில் காசோலை களின் இமேஜை ஸ்கேன் செய்யும்போதே போலிகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

 

புதிய சி.டி.எஸ். காசோலைகள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெனவே உள்ள காசோலைகளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பித்து பெறலாம்.

 

சி.டி.எஸ். காசோலைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கை யாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்டணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாளருக்குச் சாதகமான விஷயங்கள்.அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழுதும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத்தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலைகளை வங்கி ஏற்காது’

 

இவ்வளவு அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த சி.டி.எஸ். காசோலைகளை (CTS – Cheque Truncation System – 2010} 2013 ஜூலை 31ம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த தொடங்க வேண்டும் என என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால் இப்போது இது இன்னும் ஆறு மாதக் காலம், அதாவது 2013 டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. அது வரைக்கும் கடனுக்கான முன்தேதி இட்ட சி.டி.எஸ். அல்லாத காசோலைகளை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது..

 

RBI eases process of phasing out non-CTS cheques

************************************************************

After extending the deadline for withdrawal of the residual non-Cheque Truncation System (CTS) 2010 standard cheque from March 31 to July 31, 2013, the Reserve Bank of India (RBI) has now introduced separate clearing session at three CTS centres of Mumbai, Chennai and New Delhi for clearing residual non-CTS 2010 instruments, including post-dated and EMI cheques with effect from January 1, 2014.–

http://en.wikipedia.org/wiki/Cheque_truncation_system

அத்திக்காய் காய் காய்…

கவியரசர் கண்ணதாசன்  மறைந்து 32 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் அவர் எழுதிய ‘மானிடர் ஆன்மா மரணமெய்தாது; மறுபடிப் பிறந்திருக்கும்’ என்பதை போலவே அவரது ஆன்மா அவரது பாடல்களில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்று இசைப்பா மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல் எனக்குப் பிடித்த  ‘அத்திக்காய், காய் காய்’.

இந்தப் பாடல் பலே பாண்டியா படத்தில் வருவது. நான்கு சிவாஜி, நான்கு எம்.ஆர். ராதா என்று குழப்பமோ குழப்பம். நடிகவேளின் நடிப்பு ரொம்பவும் ரசிக்க வைக்கும். நான்கு சிவாஜிகளுக்கு நான்கு கதாநாயகிகள் என்று நம்மைப் படுத்தாமல் விட்ட இயக்குனருக்கு நன்றி!

இன்னொரு பாடலும் இந்தப் படத்தில் சூப்பர் ஹிட்: சிவாஜியும், நடிகவேளும் பாடும் மாமா, மாப்ளே பாடல்!

அத்திக்காய் பாடலை பாடல் வரிகளுடன் கேட்டு ரசிக்க இங்கே

இந்தப் பாடலின் பொருளை திரு சொக்கன் இங்கே விளக்குகிறார்.

பூமி தினம் (Earth Day)

ranjani narayanan

பூமி தினம் (Earth Day)
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எதற்காக நாம் வாழும் இந்த பூமிக்குத் தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்? பல காரணங்கள். அடுக்கிக்கொண்டே போகலாம்.
முதல் காரணம்: நாம் எல்லா வளங்களும் நிறைந்த இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதற்காக பூமித்தாய்க்கு நன்றி கூற.
இரண்டாவது காரணம்:
இந்த நிலவுலகை சுமார் 2 மில்லியன் மனிதரல்லாத உயிரினங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழுகிறோம். இன்னும் புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 உயிரினங்கள் அழிந்து போக நாம் காரணம் ஆகிறோம். இதற்காக பூமித்தாயிடம் மன்னிப்புக் கேட்க!
இது மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம். அதனால் சில விஞ்ஞானிகள் இந்த சகாப்தத்தை மனித சகாப்தம் (Anthropogenic) என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்போது நடக்கும் நல்லது கெட்டது இரண்டுக்குமே நாம்தான் காரணம்.
ஏன் உயிரினங்கள் அழிந்து போயின? மனித இனப்பெருக்கம் தான் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை பில்லியன் ஆக இருந்த உலக மக்கள் தொகை இப்போது 7 பில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும் 2050 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 9 பில்லியனைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.
மக்கள் இனப் பெருக்கம் உணவுப் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள்…

View original post 330 more words

இன்று சிட்டுக்குருவிகள் தினம்

ranjani narayanan

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்.

இந்தச் சிட்டுக் குருவிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. கூட்டங்கூட்டமாக வசிப்பவை. மிகுந்த இரைச்சல் போடுபவை; நாம் சாப்பிடும் சாப்பாடோ, மற்ற தின்பண்டங்களோ துளி கீழே சிந்தினாலும் எங்கிருந்தோ ‘சிட்டா’ க பறந்து வந்து தன் அலகினால் கொத்தி எடுத்துக் கொண்டு ‘சிட்டா’ க பறந்து போவதால்தான் இதற்கு சிட்டுக் குருவி என்று பெயர் வைத்தார்களோ?

வீட்டு முற்றங்கள் தான் இவைகளின் ராஜ்ஜியம். இவை குதித்துக் குதித்து வரும் அழகே தனி.

இவைகளின் இரைச்சல் தாங்காமல் எவ்வளவு முறை விரட்டினாலும் திரும்பவும் வெகு சகஜமாக  வீட்டுக்குள் நிழைந்து வீட்டு உத்தரங்களிலும், சுவர்களில் இருக்கும் சின்னச் சின்னப் பொந்துகளிலும் கூடு கட்டுபவை. குருவி கூடு கட்டுவது குடும்பத்திற்கு நல்லது என்று கருதப் பட்டதால் குருவிக் கூட்டைக் கலைக்க மாட்டார்கள்.

இந்தக் குருவிகள் பெரும்பாலும் தானியத்தைத் தின்று வாழ்பவை. பழங்கள், கொட்டைகள், குப்பைகள், பிரட் துண்டுகள் என்று கிடைத்ததை தின்று வாழக் கற்றவை. இந்த குணமே இவை உலகெங்கிலும் காணக் கிடைப்பதற்குக் காரணம். நகரப் புறங்களில் வீடுகளிலும், கிராமப் புறங்களில் வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளின் அருகிலும் வாழக் கூடியவை.

இவைகளின் அபரிமிதமான எண்ணிக்கை, எந்தச் சூழலிலும் வாழும் பாங்கு, மனிதர்களைக் கண்டு பயப்படாத தன்மை இவற்றினாலேயே சிட்டுக்குருவிகள் பறவை இனங்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. இவைகளைப் பற்றிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? இதுவரை இவைகளைப் பற்றி…

View original post 343 more words

உங்கள் எலும்புகளின் வயது என்ன?

ranjani narayanan

 

உங்களுக்கு எலும்பு மெலிவு நோய் என்கிற ஆஸ்டியோபோரோசிஸ் வந்திருக்கிறது என்றால் உங்களைவிட உங்கள் எலும்புகளுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.

எலும்பு மெலிவு நோய் என்றால் என்ன?

நம் எலும்புகள் அடர்த்தி குறைந்து பலவீனமாகி விடுவதுதான் எலும்பு மெலிவு நோய். எலும்புகள் பலவீனப் படுவதால் எளிதில் உடைந்து போகக் கூடும்.

நம் எல்லோருக்குமே தெரியும் நம் எலும்புகளின் உறுதிக்கு கால்சியம் தேவை என்று. நமக்குத் தேவையான கால்சியம், மாத்திரைகள் மூலமாக அல்லது உணவுகள் மூலமாக கிடைக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்போது அல்லது போதுமான அளவு உடலுழைப்பு இல்லாத போது எலும்புகள் பலவீனப்பட்டு உடைய ஆரம்பிக்கின்றன.

பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் 40 வயதுக்கு மேல் பல பெண்கள் ஆஸ்டோ கால்சியம் மாத்திரை சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

சில சமயங்களில் இப்படி கால்சியம் மாத்திரை சாப்பிடுவது மாரடைப்பு நோய்க்குக் காரணம் ஆகலாம் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதிகப்படியாக கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்று சொல்லுகிறார்கள்.

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதால்  உடலுக்கு அதிகப்படியான கால்சியம் ஒரே நேரத்தில் கிடைக்கிறது. உடலால் ஏற்றுக்கொள்ளப் படாத  கால்சியம் டெபாசிட்டுக்களினால் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாறாக, உணவின் மூலம் கிடைக்கும் கால்சியம் நிதானமாக உடலால் உறிஞ்சப் படுகிறது. அதனால் அது பாதுகாப்பானது. ஆனால் நாம் சாப்பிடும் உணவிலிருந்து…

View original post 207 more words